Wednesday, January 13, 2010

Pongal



மாறும் கலாச்சாரம்: பொங்கல் வாழ்த்தும், பொங்கல் படியும்!
-பெருமாள்.
தமிழர் பண்டிகைகளில் வேறு எந்த பண்டிகைக்கும் இல்லாத சிறப்பு, பொங்கல் பண்டிகைக்கு மட்டுமே உண்டு.

பின்னே, தொடர்ந்து ஏழு நாள் லீவுன்னா சும்மாவா...?

முதல் நாள் போகி பண்டிகை, 2வது நாள் பொங்கல், மறுநாள் மாட்டுப் பொங்கல், அடுத்த நாள் காணும் பொங்கல் என... அந்த நான்கு நாள் கொண்டாட்டமும் அந்த வாரம் முழுவதுமே விடுமுறை விட்டது போன்ற உணர்வை தரும். அந்த சந்தோஷத்தை அசைப்போட்டு, அசைப்போட்டே அந்த ஆண்டு முழுவதையும் ஓட்டிய பள்ளிப்பருவத்து நினைவுகள் தான் இந்த கட்டுரை. பொங்கல் பண்டிகைக்கு மற்றொரு சிறப்பும் உண்டு. அதாவது, வயது வித்தியாசமின்றி அனைத்து வயதினரையும், ஏற்ற, தாழ்வுகள் இன்றி அனைத்து தரப்பினரையும் மகிழ்ச்சிப்படுத்தும் ஒரே பண்டிகை பொங்கல் ஆகத்தான் இருக்க முடியும்.

குறிப்பாக, பொங்கல் பண்டிகை காலங்களில் தான் வாழ்த்து அட்டைகள் மூலம் அன்பையும், வாழ்த்துக்களையும் பரிமாறிக்கொள்ள முடிந்தது. இன்னொரு சிறப்பம்சமாக, மற்றவருக்கு 'பொங்கல் படி' (பொங்கல் போனஸ்) கொடுத்து அதில் மகிழ்ச்சிக்காணும் ஒரே பண்டிகையாகவும் இது திகழ்கிறது. உதாரணமாக, அரசியலில் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் என்றால், மக்களுக்கு இலவச-வேட்டி சேலை கொடுத்து மகிழ்வார்கள். அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் கிடைக்கும். தொழில்துறையினர் தங்களது ஊழியர்களுக்கு போனஸ் கொடுப்பார்கள். விவசாயிகள், தாங்கள் பயிரிட்ட கரும்பு, மஞ்சள் மற்றும் தானிய வகைகளை விற்பனை செய்து பொருளீட்டி, தங்களது குடும்பத்தினருக்கு வழங்குவர். இப்படி ஒவ்வொரு தனி நபரையும், ஒவ்வொரு குடும்பத்தினரையும், ஒவ்வொரு கிராமத்தினரையும்... ஒட்டுமொத்தமாக நமது தமிழ் சமுதாயத்தையே மகிழ்ச்சிப்படுத்திய அந்த கலாச்சாரம் இன்று நாளுக்கு நாள் தேய்ந்து கொண்டிருப்பது வருத்தத்திற்குரியது. எஸ்.எம்.எஸ். ஆக சுருங்கிய பொங்கல் வாழ்த்து:'பொங்கல் வரும் பின்னே; பொங்கல் வாழ்த்து' வரும் முன்னே என்று சொல்லும் அளவுக்கு மக்களோடு இரண்டற கலந்திருந்தன பொங்கல் வாழ்த்து அட்டைகள். பிரிந்துபோன உறவுகள், மறந்துபோன நட்புகள், தொலைதூரத்தில் இருக்கும் சொந்த பந்தங்கள் என அனைத்து உறவுகளையும், மீண்டும் புதுப்பித்துக் கொள்ள ஓர் வாய்ப்பு ஏற்படுத்தி தந்த பெருமை பொங்கல் வாழ்த்து அட்டைகளுக்கு மட்டுமே உண்டு.

No comments:

Post a Comment